அம்பாறையில் அதிகரித்துள்ள சட்டவிரோத சம்பவங்கள்
அம்பாறை (Ampara) மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சட்டவிரோத சம்பவங்கள் மற்றும் திருட்டுக்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மழை மற்றும் வெயில் போன்ற காலநிலை மாற்றம் இப்பகுதியில் காணப்படுவதனால் இவ்வாறான நிலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கண்காணிப்பு நடவடிக்கை
கடந்த மாதத்தை விட இம்மாத நடுப்பகுதியில் பட்டப்பகலில் வீடுகள் உடைப்பு, சட்டவிரோத கால்நடை கடத்தல்கள், மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி பயணித்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாறான நிலையில் பாதுகாப்பு காவலரணில் கடமைக்காக இருக்கின்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கைத்தொலைபேசி பாவனையிலும் உணவங்களில் தேநீர் அருந்தி கடமைத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீதிகளில் சட்டவிரோதமாக வாகனங்களை தரித்து வைத்தல் மற்றும் வீதி விளையாட்டுக்களும் அதிகரித்துள்ளன.
மேலும், அதிகாலை வேளையில் கல்முனை சாய்ந்தமருது காரைதீவு பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் மண் கடத்தல் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் குறித்த கடத்தல்களை தடுப்பதற்கு வழமை போன்று இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் வீதி கண்காணிப்பு நடவடிக்கையின் அவசியம் குறித்து பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri