சட்டவிரோத மணல் கடத்தல் - டிப்பருடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிப்பர் சாரதியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (12.01.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
செம்பியன்பற்று பகுதியில் சட்டவிரோதமாக நீண்ட காலமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த டிப்பர் சாரதியே கைதாகியுள்ளார்.
திடீர் சுற்றிவளைப்பு
இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை திடீரென சுற்றிவளைத்த மருதங்கேணி பொலிஸார், சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பருடன் சாரதியை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதி டிப்பருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணையின் பின் கைது செய்யப்பட்ட நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam