சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியாது திணறும் கிளிநொச்சி: இராணுவ காலரண்களை அமைக்கவும் முடிவு(Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த முடியாது மாவட்டம் சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், இவற்றைக் கட்டுப்படுத்த இராணுவ காவலரண்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரணைமடு குளத்தின் கீழ் உள்ள ஆற்றுப்படுகையில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்றையதினம்(19) அரசாங்க அதிபரின் பணிப்பின் கீழ் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட இடர் முகாமைத்துவ பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் நேரடியாகச் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர்.
இதன்போது நிலைமைகளின் ஆபத்தினை உணர்ந்து கொண்ட இவர்கள் குறித்த
பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த
இராணுவ காவலரண்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.











தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

CWC புகழ் எப்போதும் பெண்களை தொட்டு தொட்டு பேசுகிறார்... விமர்சனங்களுக்கு அவரது மனைவி பதிலடி Cineulagam
