கிண்ணியாவில் சட்டவிரோத மணல் அகழ்வு : 15 படகுகள் பறிமுதல்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர், 15 மணல் ஏற்றிய படகுகளுடன் நேற்று(06.03.2026) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உப்பாறு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள ஆற்றுப்பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுவதாக கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த
இதன்போது, ஆற்றில் மணல் ஏற்றிய நிலையில் காணப்பட்ட 15 படகுகளையும், அதில் இருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கடற்படையினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட 15 மணல் படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கிண்ணியா பொலிஸார், சந்தேகநபர்களை இன்று(07) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.



பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 9 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam