கிளிநொச்சியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு (photos)
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடல் மட்டத்தில் இருந்து வெறும் ஒன்றரை மீற்றர் உயரமே கொண்ட இயக்கச்சி பிரதேசத்தின் ஆற்று சமவெளி பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான டிசம்பர் லோட் மண் அகழப்பட்டு யாழ்ப்பாணத்தை நோக்கி செல்வதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது.
கிராம மக்கள் கோரிக்கை
குறித்த மணல் அகழ்வை உடனடியாக தடுக்காவிட்டால் மிக விரைவில் இயக்கச்சி
பிரதேசத்தின் நிலங்களும் உவராக மாற்றமடைந்து மக்கள் வாழ முடியாத சூழல்
ஏற்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த விடயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொண்டு விரைந்து குறித்த மணல் அகழ்வை தடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |












