முல்லைத்தீவில் அதிகரிக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
முல்லைத்தீவு - முள்ளியவளை கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள கணுக்கேணி குளத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வாளர்களால் தொடர்ச்சியாக மணல் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு மணல் அகழ்வதால் குளத்தின் அலகரை பகுதியில் பாரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் போக்வுரத்து செய்யமுடியாத நிலையில் வீதிகளும் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
வீதிக்கு பாரிய பாதிப்பு
இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு தொடருமாக இருந்தால் குளத்திற்கும் வீதிக்கும் பாரிய பாதிப்பு ஏற்படும் என்றும் மணல் அகழ்வாளர்கள் தொடர்ச்சியாக மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் கண்டுகொள்ளதா நிலை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்துடன் இவ்வாறான சம்பவத்தினை உரிய திணைக்கள அதிகாரிகள் கவனத்தில் எடுத்து உடன் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan