சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல் (Photos)
கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் (27-07-2023) பிற்பகல் 2 மணிக்கு கண்டவளை பிரதேச செயலக மாநாடு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
சட்டவிரோதமான மணல் அகழ்வுகள்
குறித்த கலந்துரையாடலில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவை மற்றும் சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுதல் போன்ற பல்வேறு விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.தேவவரதன், இரணைமடு நீர் பாசன பொறியியலாளர் எஸ்.செந்தில் குமரன் மற்றும் கமநல சேவை நிலையங்களின் பெரும்பாக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கிராம அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
