சட்டவிரோதமான முறையில் பெட்ரோல் விற்பனை: ஒருவர் கைது
திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் பெட்ரோல் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த 56 வயதுடைய கடை உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த கடையை சோதனை செய்துள்ளனர்.
இதன்போது கடைக்கு பின்னால் உள்ள அவரது வீட்டில் கேன்களில் நிரப்பப்பட்ட நிலையில் அதிகளவிலான பெட்ரோல் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரை இன்று(27) திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வரும் காலகட்டத்தில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோலை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு பெட்ரோலை விற்பனை செய்யவது சட்டவிரோதமான செயல் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
| எரிபொருள் விநியோகம் தொடர்பில் உறுதியாக தெரியவில்லை! காத்திருப்பதில் அர்த்தமில்லை - முக்கிய அறிவித்தல் |
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri