முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி! முற்றுகையிட்ட ஊர் மக்கள்
முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெற்ற பகுதியினை இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொது அமைப்புகள் முற்றுகையிட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 600 லீற்றருக்கு மேற்பட்ட கோடா மற்றும் கசிப்பு என்பனவற்றை மக்கள் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை
இதனையடுத்து குறித்த தடயப்பொருட்களை புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புது குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு,தொட்டியடி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் சிலர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த நிலையில், கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்துள்ளது.

மேலும், சட்டவிரோத கசிப்பினை பயன்படுத்துவதன் காரணமாக பல இளைஞர்கள் தற்பொழுது விளையாட்டுகளிலும் பங்குகொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
இதனை மீட்டெடுக்கும் வகையிலும் தமது பகுதியில் இருந்து சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை முற்று முழுதாக நிறுத்தும் பொருட்டு நேற்றைய தினம் 05.03.2026 சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

