சம்பூரில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி - இருவர் கைது!
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு களப்புப் பகுதியை அண்டிய காட்டுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பூர் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சனிக்கிழமை (14) மாலை குறித்த காட்டுப் பகுதி முற்றுகையிடப்பட்டது. இதன்போது கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகையான பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கோடா: 567.05 லீற்றர்
வடிகட்டப்பட்ட கசிப்பு: 23.5 லீற்றர்
பரல்கள்: 04 அலகுகள்
மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மின்சார வயர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கைபற்றப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் 27 மற்றும் 33 வயதுகளையுடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நேற்று (15) காலை பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் வியாழக்கிழமை (மார்ச் 19) இவர்களை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri