சட்டவிரோதமான உத்தரவு: சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு (Video)
சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொது சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் நலின் ஹேரத் தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், அரசியலமைப்பின் 52(3) பிரிவின்படி அமைச்சரவை கலைக்கப்படும் போது அனைத்து அமைச்சின் செயலாளர்களும் பதவி வகிப்பதை நிறுத்துவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
ஸ்காட்லாந்தில் கொடூர பாலியல் குற்றவாளி தப்பியோட்டம்: தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் News Lankasri