மட்டக்களப்பு கடற்றொழில் அதிகாரிகளின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய சட்டவிரோத வலைகள்
மட்டக்களப்பு - ஏறாவூர் கடற் கரைப்பகுதியில் கடற்றொழில் அதிகாரிகள், கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 22 அரை இலச்சம் ரூபா பெறுமதியான பெரும் தொகை சட்டவிரேத சுருக்குவலைகள் மற்றும் 3 தோணிகளை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி சோதனை நடவடிக்கை
ஒன்றை நேற்று(26.02.2024) மேற்கொண்டதில் ஏறாவூர் கடற்கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிலர் தொடர்ச்சியாக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை
இதனடிப்படையில் கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்க திணைக்கத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர், குடியிருப்பு கடற்கரை பகுதியை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது அந்த பகுதி கடற்கரையில் தொழிலுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 20 இலச்சம் ரூபா பெறுமதியான பெருமளவான சட்டவிரோத வலைகளையும் சட்டவிரோத வலையுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 அரை இலச்சம் ரூபா பெறுமதியான 3 தோணிகளையும் கைப்பற்றியதுடன், இதனை எவரும் உரிமை கோராத நிலையில் கைப்பற்றப்பட்ட வலைகள் தோணிகளை கல்லடியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் நீரியல் வழங்கள் திணைக்களத்தின் காரியாலயத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில். கைப்பற்றப்பட்ட வலைகள் தோணிகளை இன்று மட்டக்களப்ப நீதவான் நீதிமன்றில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |