அவுஸ்திரேலியா சென்றால் படகுகள் எரிக்கப்படும்:பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றால், அந்த படகுகளை அவுஸ்திரேலியா பாதுகாப்பு பிரிவினர் எரித்து விடுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைப்பற்றும் படகுகளை எரித்து அழிக்கும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவினர்
சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று,அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றினால், அந்த படகுகளை அவர்கள் தீயிட்டு அழித்து விடுவார்கள்.
அத்துடன் இந்த ஆண்டு முடிவடைந்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 399 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வேறு நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் நபர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வியாபாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனைகளையும் விதிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
