அரச வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள முறைகேடான கடன்கள் தொடர்பில் சம்பிக்க ரணவக்க கோரிக்கை
அரசாங்க வங்கிகளினால் வழங்கப்பட்டுள்ள முறைகேடான கடன்களை மீளப்பெற நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் (21.06.2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு-செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு முன்னர் இலங்கையின் வங்கி முறைமையில் உள்ள முறைகேடான கடன்களை மீளப் பெறுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இதேவேளை, கடந்த காலங்களில் மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்த போதிலும் அதன் நன்மைகள் பொதுமக்களுக்குக் கிடைக்கவில்லை என அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |