சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த மதுபானங்களுடன் ஒருவர் கைது
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் பௌர்ணமி தினமான இன்றையதினம் (10) சட்ட விரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்யவிருந்த நபரொருவரை நுவரெலியா மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர் .
நுவரெலியா மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு குறித்த தோட்ட பொது மக்கள் மூலம் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திடீர் சுற்றி வளைப்பு
லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தில் மது விற்பனை செய்யும் இடத்தை சுற்றி திடீர் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போது அனுமதி பத்திரமின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 மதுபான போத்தல்களையும் 96 கள்ளு போத்தல்களையும் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதே தோட்டத்தில் நீண்ட நாட்களாக மது விற்பனை செய்து வந்த 30 வயதுடையே ஆணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் , அவரிடம் இருந்து மீட்க்கப்பட்ட மதுபான போத்தல்களையும் பறிமுதல் செய்து லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைந்துள்ளனர்.
சந்தகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
