முல்லைத்தீவில் சட்டவிரோத மதுபான உற்பத்தி - சந்தேகநபர் தப்பியோட்டம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரை கண்டு தப்பியோடியுள்ளார்.
குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (08.11.2025) மாலை சோதனை நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, அங்கிருந்த சந்தேகநபர் பொலிஸாரை கண்டு தப்பியோடியுள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை
அத்துடன், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 லீட்டர் அளவிலான சட்டவிரோத கசிப்பினை புதுக்குடியிருப்பு பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், தப்பியோடிய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam