மல்லாவி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி : ஒருவர் கைது (Photos)
மல்லாவி - அனிஞ்சியன்குளம் 2ம் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மல்லாவி பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளான லக்மல் குமார மற்றும் லசந்த விதாரண ASP-1 ,திசநாயக, பொலிஸ் உத்தியோகத்தர்களான பகீரதன், இளவரசன், றுசாந்த ,விஜி இணைந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 95 லீற்றர் கோடா மற்றும் 50 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
அனிஞ்சியன்குளம் 2ம் பகுதியைச் சேர்ந்த 51 வயதான குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான குடும்பஸ்தரை நாளைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில்
முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மல்லாவி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.





