புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை : ஒருவர் கைது (Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்த இரண்டு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த முற்றுகை நடவடிக்கை இன்று (29.12.2023) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், 32 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 14 பரல்கள், 810 லீட்டர் கோடா மற்றும் 60 லீட்டர் கசிப்பினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
கசிப்பு உற்பத்தி நிலையம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலேயே இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவரை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! கேப்டன் பிரபாகரன் தந்த மாபெரும் வெற்றி - சீமான்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
