திருகோணமலையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது
திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா காட்டுப்பகுதியில் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
அத்துடன் நேற்றுமுன்தினம்(21) ஐந்து பெரல் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை பொலிஸ் பிரிவின் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது
இதன்போது, ஐந்து பெரல்களில் இருந்த 324 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கன்னியா ஆறாம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சந்தேகநபரை கோடா பேரல்களுடன் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri