சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை: தாம் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் கவலை
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் தாம் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் (04.06.2025) மாலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
கடற்தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினை
இதில் முள்ளிவாய்க்கால் மீன்பிடி தொழிலாளர் அமைப்பு மற்றும் கள்ளப்பாடு மீன்பிடி அமைப்புகளைச் சேர்ந்த பிரதிகள் கலந்து கொண்டு கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.
குறிப்பாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளான வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் உள்ளிட்ட மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மீன்பிடி நீரியல் திணைக்களம் மற்றும் கடற்படை இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
