யாழ். மாமுனை கடற்பரப்பில் நால்வர் கைது
யாழ்(Jaffna) வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழில் ஈடுபட்ட நால்வர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் அம்பன் தொடக்கம் - சாலை வரை தொடர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாமுனை கடற்பகுதியில் நேற்று (19) இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த நால்வர் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
