வலி. வடக்கில் சட்டவிரோத மண் அகழ்வு (Video)
வலி. வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம் பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மக்கள் விசனம்
“பிள்ளையார் கோயிலின் குளத்தில் இருந்து தனியார் ஒருவர் குளத்தில் தாமரை வளர்க்கப் போவதாக தெரிவித்து குளத்தில் இருந்து சுமார் 200 லோட்டுக்கு அதிகமான மணலை வெளி இடங்களில் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறித்த குளத்தில் கால்நடைகள் நீர் அருந்து நிலையில் பாரிய குழிகள் தோண்டப்பட்டு மண் அகழ்வு இடம் பெறுவதால் கால்நடைகள் குளத்துக்குள் மூழ்கும் துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஊர் மக்கள் சிலர் குறித்த குளத்தில் மணல் அகழ்பவர்களை கேட்டதற்கு பிரதேச சபை தவிசாளர் தமக்கு அனுமதி தந்ததாக தெரிவித்தே மணல் ஏற்றிச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்
குறித்த விடயம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பிரபாகரன் கருத்து தெரிவிக்கையில்,
”குறித்த குளத்தில் இருந்து ஒரு கிழமைக்கு மேலாக பாரிய மண் இடம் பெறுகிறது. சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் பிரதேச சபை செயலாளருக்குத் தெரியப்படுத்தியதோடு தெல்லிப்பழைப் பிரதேச செயலாளருக்கும் தெரியப்படுத்தினேன்.
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய வாகனங்களை தொல்லிப்பளைப் பிரதேச செயலாளர் கைப்பற்றிய நிலையில் மணல்களை பறித்த பின்பு சட்ட நடவடிக்கைக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்காமல் எவ்வாறு செல்ல அனுமதித்தார் என கேள்வி எழுப்பினார்”
வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர்
குறித்த விடயம் தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தனை தொடர்பு கொண்டு வினவியபோது,
"குறித்த குளம் கமநல சேவைத் திணைக்களத்தின் கீழ் வருவதாகவும் மண் அகழ்வுக்கு தாம் அனுமதி வழங்கவும் இல்லை வழங்கவும் முடியாது" என்றார்.
வலி.வடக்கு பிரதேச சபையின் செயலாளர்
குறித்த விடயம் தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையின் செயலாளரை தொடர்பு கொண்டு வினவியபோது,
“பிரதேச சபை அதற்கான அனுமதியை வழங்கவில்லை என தெரிவித்ததோடு மண் அகழ்வு தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் தமக்கு அறியத்தந்தார்” என தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் சிவசிறியைத் தொடர்பு
கொண்டு வினவியபோது, “குறித்த பகுதியில் மணல் அகழ்வு தொடர்பாக கடந்த 18 ஆம் திகதி பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.







அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
