கொழும்பில் சிக்கிய சீன பிரஜை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பில் சட்டவிரோதமாக சீன முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகளை விநியோகம் செய்த சீன பிரஜைக்கு கோட்டை நீதவான் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இலங்கையில் விற்பனை மற்றும் நுகர்வுக்கு முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ள சீன முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகளை விநியோகித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட, சீன நாட்டவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார், கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (25.08.2023) முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே ஒரு மில்லியன் ரூபா அபராதத்தை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த சீனப் பிரஜையிடமிருந்து சுமார் 6,400 சிகரெட்டுகளை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பெறுமதி சுமார் 760,000 ரூபாய்கள் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, காலி மாகல்ல பிரதேசத்தில் 1.3 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த 52 வயதுடைய ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை சிகரெட்டுகளுடன் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
