மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தலைக்கவசம் பாதுகாக்க என கூறி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பு

Batticaloa Eastern Province
By Bavan May 08, 2026 09:16 AM GMT
Report

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்களின் தலைக்கவசம், கையடக்க தொலைபேசிகளை பாதுகாப்பதற்கு என பொது நூலகத்தினுள் சட்டவிரோதமாக கொட்டகை அமைத்து அதற்கு கப்பமாக பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த நிதி மாநகர சபைக்கு செல்லுகின்றதா, யார் கையாளுகின்றனர், யார் பெற்றுக் கொள்கின்றனர் என மட்டு. மாநகர முதல்வர் ,ஆணையாளர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எனவும் சிவானந்தராஜா மற்றும் ஒருங்கிணைப்பாளர் அ.ராஜ்குமார் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு- பாலைமீன் மடுவில் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (7) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தனர்.

விஜய்க்கு ஆட்சியை கொடுப்பதில் சிக்கல் - கைவிரித்தார் ஆளுநர்

விஜய்க்கு ஆட்சியை கொடுப்பதில் சிக்கல் - கைவிரித்தார் ஆளுநர்

பணம்  வசூலிப்பு

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னாள் உள்ள வாகன தரிப்பிடம் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளுக்கு 70 ரூபா பணம் அறவிடுகின்றனர்.அந்த மோட்டார் சைக்கிளில் வருபவர்களின் தலைக்கவசத்தை பாதுகாக்க வேண்டியது அந்த வாகன தரிப்பிடத்தை குத்தகைக்கு பெற்றவர்களது கடமை.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தலைக்கவசம் பாதுகாக்க என கூறி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பு | Illegal Charges Helmets Security At Gandhi Park

ஆனால் பொது நூலகத்துக்குள் சட்டவிரோதமாக ஒரு கொட்டகையை அமைத்து அதில் நீதிமன்றத்துக்கு வருகின்றவர்களின் உடமையை பாதுகாப்பதாக கூறி தலைக்கவசம், குடைகள், கையடக்கதொலை பேசிகள் போன்ற பொருட்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக 50 ரூபா தொடக்கம் 100 ரூபாவரை பணத்தை வசூலித்து ஏழை மக்களின் பணத்தை சுரண்டும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

சட்டவிரோதமாக மணல் அகழ்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

சட்டவிரோதமாக மணல் அகழ்பவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

கோரிக்கை

தலைக்கவசம் மோட்டர் சைக்கிளுடன் சம்மந்தப்பட்டது. மோட்டார் சைக்கிள் ஓட வேண்டுமாக இருந்தால் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.ஆதலால் நாங்கள் மோட்டார் சைக்கிளின் மீது தலைக் கவசத்தை வைத்து விட்டு சென்றால் அதனை பாதுகாக்க வேண்டியது குத்தகைக்கு பெற்ற உரிமையாளரதும், அங்கு கடமையாற்றும் உத்தியோக த்தர்களது கடமையாகும்.

ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாது மோட்டார் சைக்கிளுக்கு 70 ரூபாவும் தலைக்கவசத்துக்கு 50 ரூபாவும் அறவீடு செய்கின்றனர். இது ஒரு சட்டத்துக்கு விரோதமான மறைமுகமான கப்பமாக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி பார்க்கின்றது எனத் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தலைக்கவசம் பாதுகாக்க என கூறி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பு | Illegal Charges Helmets Security At Gandhi Park  

பாடசாலைகளில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்! எடுக்கப்படவுள்ள அவசர நடவடிக்கை

பாடசாலைகளில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்! எடுக்கப்படவுள்ள அவசர நடவடிக்கை

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US