சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்ட வியாபார நிலையங்கள்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலம்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சட்டத்திற்கு புறம்பாக 25 வரையான வியாபார நிலைய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிவியவந்துள்ளது.
கரைச்சி பிரதேச சபையிடம் ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு ஊடாக கோரப்பட்ட தகவல்களுக்கு கிடைக்கப்பெற்ற பதில்கள் மூலம் மேற்படி சட்டவிரோதமாக வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டடங்கள் அமைக்கப்படுவதாக இருப்பின் பிரதேச சபையின் கட்டட அனுமதி பெறப்படல் வேண்டும் என கரைச்சி பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரின் அறிக்கையில் கூறப்பட்டள்ளது.
கட்டட அனுமதி
மேலும், “இது சட்டம் ஆனால் பேருந்து நிலையத்திற்குள் அமைக்கப்பட்டு வருகின்ற 25 வரையான கட்டடங்களுக்கு கட்டட அனுமதி உட்பட எவ்வித அனுமதியும் கரைச்சி பிரதேச சபையிடம் பெறப்படவில்லை” எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு வியாபார நிலையங்களுக்குரிய பயனாளிகள் தெரிவு தங்களால் மேற்கொள்ளப்படவில்லை, தங்களிடம் பெயர் பட்டியல்கள் இல்லை எனவும் கரைச்சி பிரதேச சபை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவல்களுக்கு பதில் வழங்கியுள்ளது.
இந்நிலையில், பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட நகர பகுதியில் அவர்களின் எவ்வித அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டு வருகின்ற வியாபார நிலையங்கள் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |