ஊரடங்கு சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி திருகோணமலையில் சட்டவிரோத கட்டடம்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி திருகோணமலையில் சட்டவிரோத கட்டடம் ஒன்றை அமைக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி திருகோணமலை மரத்தடி சந்தி பிரதேசத்தில் சனீஸ்வரன் ஆலயத்திற்கு அருகில் இவ்வாறு திருகோணமலை நகராட்சி மன்றத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் சட்ட விரோதமாகக் கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாகத் திருகோணமலை நகரசபைச் செயலாளர் ஜெயவிஷ்ணு தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவ இடத்தில் எவ்வித கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்குத் திருகோணமலை நீதி மன்றத்தினால் ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் ஊரடங்கு சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இவ்வாறு கட்டட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், பொது மக்களினால் சம்பவ தினமான திருகோணமலை நகரசபைச் செயலாளர் ஜெயவிஷ்ணுக்கு தெரியப்படுத்தியதனை அடுத்து உடன் களத்திற்கு விஜயம் செய்து இவ்வாறு சட்டவிரோதமாக அமைக்கப்படவிருந்த கட்டடத்தில் வேலைகளை உடன் நிறுத்துமாறு கட்டளையிட்டிருந்தார்.
மேலும் திருகோணமலை நகரசபைச் செயலாளர் ஜெயவிஷ்ணுவின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன்,ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் உரிய சட்ட விரோத கட்டடம் அமைப்பதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
