சட்டவிரோதமாக பீடி இலைகள் கடத்திய நபர் கைது(Photos)
உடப்பு கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்று இரவு வீடொன்றினை சோதனைக்குற்படுத்திய போது கூலர்
லொறியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பீடி இலைகள், அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட உள்ளதாக உடப்பு கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து சிலாபம் ஜயபிம பகுதியில் வைத்து குறித்த வீட்டை சோதனைக்குற்படுத்தியுள்ளனர்.

பீடி இலைகள் கடத்தல்
இதன்போது 1460 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 1.1 கோடி ரூபா என மதிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட பீடி இலைமளையும், பீடி
இலைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கூலர் லொறியையும் புத்தளம் கலால்
வரித் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 22 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan