நாடாளுமன்ற உறுப்பினரின் மகனும் மருமகளும் பொலிஸாரால் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆரச்சியின் மகன் மற்றும் மருமகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது,
நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக தம்பதியினர் வீரகெட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாளை வலஸ்முல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றம்

நாடாளுமன்ற உறுப்பினரின் மகனும் அவரது மனைவியும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க விடாமல் தடுத்ததையடுத்து, பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஆபாசமான வார்த்தைப் பிரயோகம் செய்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினரின் மகனும் மனைவியும் தீய வார்த்தைகளால் திட்டுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி முறைப்பாடு செய்துள்ளார்.
| நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெத ஆரச்சியின் வாக்குறுதி |
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சியின் மகன் ரவிந்து வெதஆராச்சி, பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை முதலில் தாக்க முயற்சித்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்தியிருந்தார்.
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ள அவர், பொலிஸார் தன்னை முதலில் தாக்கிய பிறகு வார்த்தைகளால் பதிலடி கொடுத்ததாகக் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது,
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan