சட்டவிரோத தங்க இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கை
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கத்தை இறக்குமதி செய்த 05 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன்படி குறித்த நிறுவனங்களுக்கு 1,243 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதில் ஒரு நிறுவனத்திற்கு 179 மில்லியன் ரூபா அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தங்கம் இறக்குமதி
தங்கம் இறக்குமதியை மேற்கொள்ளும் அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும் இந்த சட்டவிரோத செயல்களில் இருந்து விடுபட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தங்கத்தை நேரடியாக இறக்குமதி செய்யாமல், மூன்றாம் தரப்பினரிடம் இருந்து வாங்கும் தங்கத்திற்கு, உற்பத்தி அறிக்கைகளை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் தொடர்பான சம்பவங்களை கருத்திற்கொண்டு, தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து கடந்த வருடம் மார்ச் மாதம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam