இந்திய அரசியல் களத்தில் ஒரு தனித்துவமான பதிவை முன்வைத்துள்ள நடிகர் விஜய்
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் அதிகாரபூர்வமாக நுழைந்துள்ள இந்திய (India) நடிகர் விஜய் (Vijay), தனது முதல் உரையிலேயே அதிகளவான மக்களின் ஆதரவை பதிவு செய்துள்ளார்.
அவரின் முதல் உரையானது, நேற்றைய தினம் (27) தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
முதல் உரை
இதன்போது, ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தென்னிந்திய திரையுலக நடிகரான விஜய், ஒரு அரசியல் தலைவராக தனது முதல் உரையை நிகழ்த்திய போதே மக்களின் ஆதரவு இந்தளவுக்கு காணப்படுகின்றமை இந்திய அரசியல் அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், அரசியலில் அவரின் நகர்வானது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளதுடன் குறிப்பாக ரசிகர்கள் மத்தியில், திரையுலகிலிருந்து பொது வாழ்க்கைக்கு மாறுவதற்கு வலுவான ஆதரவு எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், தனது உரையின் போது இந்திய தமிழர்கள் மாத்திரமல்லாமல் இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவும் தமக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளதுடன், தனது அரசியல் பயணமானது இலங்கை தமிழர்களையும் சார்ந்திருக்கும் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
