இளவாலை பொலிஸாரால் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியிலிருந்து வாகனத்தில், கேரளக்கஞ்சா கடத்திச் சென்ற ஒருவர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கஞ்சாவினை கடத்திச் சென்ற வாகனத்தினை துரத்திச்சென்ற பொலிஸார், தெல்லிப்பழை சந்தியில் வைத்துக் குறித்த சந்தேக நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பொலிஸ் நிலையத்தில் வைத்து வாகனத்தினை சோதனையிட்டபோது அதில் சூட்சுமமாகக் கஞ்சா பொதி மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
வவுனியாவிலிருந்து வந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு ஒரு இலட்சத்து 35ஆயிரம்
ரூபாவுக்கு கஞ்சாவினை வாங்கி சென்ற வேலை கைது செய்யப்பட்டுள்ளார்.



