சந்திக்கச் சென்ற சிறீதரனிடம் சம்பந்தன் கூறிய ஆலோசனை
எங்களுடைய மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரனிடம் அக்கட்சியின் பெருந்தலைவரான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அக்கட்சியின் பெருந்தலைவரான இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
சம்பந்தனின் நம்பிக்கை
கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சிறீதரனுக்குத் தனது வாழ்த்துக்களையும் சம்பந்தன் தெரிவித்தார்.

"இது மக்கள் பிரதிநிதிகளின் - கட்சித் தொண்டர்களின் தெரிவு. புதிய தலைவரான உங்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களும் நல்லாசிகளும் எப்போதும் இருக்கும். எங்களுடைய மக்களுக்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவீர்கள் என்று நம்புகின்றேன்." - என்றும் சம்பந்தன் மேலும் கூறினார்.

கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், கட்சிக்குள் ஐக்கியம் அவசியம் என்பதையும் சம்பந்தன், புதிய தலைவரிடம் எடுத்துரைத்தார்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் பல வருடங்கள் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
you may like this
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri