முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை புறக்கணிப்பது அமைதியின்மைக்கு வழிவகுக்கும்!அனுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை
கொரோனாவினால் மரணமானவர்களின் உடலங்களை அகற்றும் விடயத்தில் விஞ்ஞானமுறை அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும்.அதேநேரம் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க கோரியுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையை புறக்கணிப்பது வகுப்புவாத அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அரசாங்கத்தில் ஒரு குறிப்பிட்ட குழு இனவெறியைத் தூண்டுவதாகவும், இது நீண்ட கால ஒற்றுமையின்மைக்கே வழிவகுக்கும்.
எனவே, இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு அநுரகுமார அரசாங்கத்திடம் கோரினார்.
கடந்த காலத்திலிருந்து ஆட்சியாளர்கள் முக்கிய பிரச்சினைகளைத் திசை திருப்ப இனவெறியைத் தூண்டுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவனெல்லயில் ஒரு புத்தர் சிலைக்கு கல்லெறியப்பட்ட சம்பவமும் இனவெறியைத் தூண்டும் இந்த தொடர் நடவடிக்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.