வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான மாபெரும் கையெழுத்துப் போராட்டம்
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை வலியுறுத்தி "நீதியின் ஓலம் எனும் மாபெரும் கையெழுத்துப் போராட்டம் தமிழர் தாயகம் எங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் பல புதைகுளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள், சிறுவர்கள், பெண்கள் உட்பட - சித்திரவதை செய்து, படுகொலை செய்து புதைக்கப்பட்டவர்கள் எலும்புக் கூடுகளாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பல புதைகுழிகள் அடையாளங் காணப்பட்ட நிலையில் இன்னும் தோண்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
கையெழுத்துப் போராட்டம்
இவ்வாறு, 1948 ஆம் ஆண்டு தமிழர்களின் சுதந்திரம், இறையாண்மை பறிக்கப்பட்டு இன்றுவரை இலங்கைத் தீவில் பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு, பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தாயகத்தை விட்டு அச்சுறுத்தலின் பால் வெளியேற்றப்பட்டதோடு, தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு மற்றும் பண்பாட்டு அழிப்புக்கும் நில ஆக்கிரமிப்பு மற்றும் அபகரிப்புக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு நடைபெற்ற இனப்படுகொலைக்கு பன்னாட்டுத் தலையீட்டுடன் கூடிய ஏற்றுக்கொள்ளத்தக்க பன்னாட்டுப் பொறிமுறையூடாக தமிழ் மக்களுக்கு எதிரான இனஅழிப்பு மற்றும் இதரக் குற்றங்கள் தண்டிக்கப்பட்டு, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடமும் பன்னாட்டு சமூகத்திடமும் நீதி வேண்டி தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் மாபெரும் கையொப்பப் போராட்டம் கடந்த 23.08.2025 தொடங்கி ஐந்து நாட்கள் இடம்பெற்றது.
வடக்குக்கிழக்கு எங்கும் எமது தாயக மக்கள் மிகவும் எழுச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் தங்களது கையெழுத்துக்களைப் பதிவுசெய்துள்ளனர்.
சர்வதேச நீதி
ஐந்து நாள் கொண்ட கையொப்பப் போராட்டமாக அழைப்பு விடுக்கப்பட்டு, நேற்று இலட்சக்கணக்கான கையொப்பங்களுடன் நிறைவடைந்துள்ளது.
நீதிக்கான இந்த மாபெரும் கையொப்பப் போராட்டம் அனைத்து மட்டங்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தமிழர் தாயகம் முழுவதும் எமது மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அலை அலையாகத் திரண்டு வந்து தமது கையொப்பங்களை இட்டு சர்வதேச நீதியைக் கோருகின்றார்கள்.
இந்தப் போராட்டமானது தாயகச் செயலணி என்னும் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,
கிளிநொச்சி பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,
மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,
அம்பாறை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,
திருகோணமலை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,
புத்தளம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கையழுத்துப் போராட்டத்தின் போது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
