கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட இப்தார் நிகழ்வு
அம்பாறை - கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட இப்தார் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ.ரைசுல் ஹாதி தலைமையில் நிந்தவூர் அழகாபுரி தனியார் விடுதியில் நேற்று (27.03.2024) இரவு நடைபெற்றுள்ளது.
விசேட இப்தார் நிகழ்வு
இதன்போது நோன்பு திறக்கப்பட்டு தொழுகை பிரார்த்தனை இடம்பெற்றதுடன் சங்க செயலாளர் சட்டத்தரணி ரோசன் அக்தரின் நன்றியுரையுடன் இரவு உணவுடன் சிறப்பாக நிறைவடைந்துள்ளது.
இந்நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸி,மாகாண மேல் நீதிமன்ற சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வி.இராமக் கமலன், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ,அரச சட்டவாதி எம்.ஏ.எம். லாபீர் ,உட்பட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆண் மற்றும் பெண் சட்டத்தரணிகள் கலந்து கொண்டுள்ளனர்.