இலங்கையின் தனியார் துறைக்காக 166 மில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்த IFC
சர்வதேச நிதி நிறுவனம் (IFC) இலங்கையின் தனியார் துறைக்காக 166 மில்லியன் டொலர் முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் இருந்து நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்த்துவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையிலுள்ள மூன்று முக்கிய தனியார் வங்கிகள் இந்த நிதியை விநியோகித்துள்ளது.
நிதி பகிர்வு
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி (NTB) 50 டொலர் மில்லியன் கடன் மற்றும் 20 டொலர் மில்லியன் வர்த்தக நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற கொமர்ஷல் வங்கி 60 டொலர் மில்லியன் இடர் பகிர்வு வசதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், தேசிய அபிவிருத்தி வங்கி (NDB):20 டொலர் மில்லியன் இடர் பகிர்வு வசதி மற்றும் 16 டொலர் மில்லியன் வர்த்தக நிதி என்ற அடிப்படையில் நிதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொடுக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் செய்யும் பிரத்யேகமாக பெண்களால் நடத்தப்படும் சிறு வணிகங்கள், விவசாயத்துறை, டிஜிட்டல் மற்றும் காலநிலை மாற்றம் என்பவற்றுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமலுக்கு இந்திய குடியரசு தின நிகழ்வுக்கு இராஜதந்திர அழைப்பு விடுக்கப்படவில்லை:சர்ச்சையை கிளப்பியுள்ள பதிவு..
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி