அரசாங்கம் மக்களிடம் அடிவாங்க நேரிடும் - வஜிர அபேவர்தன தகவல்
நாட்டின் தற்போதைய நிலைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அரசாங்கம் மக்களிடம் அடிவாங்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
"மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் வரிசையில் நிற்பதற்கு பலம் இருக்குமாயின் அது பெரிய விடயம்.
இப்படியான சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்தினால், அடிவாங்க நேரிடும். இதனால், முதலில் சட்டத்தை உருவாக்க வேண்டும்.
ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உறுப்பினர் என்ற வகையில் மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை உருவாக்கினால் நல்லது.
வாக்களிப்பு நிலையங்களுக்கு மக்களை கொண்டு செல்லும் முன்னர் அவர்களை வாழ வைக்க முயற்சிக்க வேண்டும்" எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri