பூஸ்டர் டோஸை போட்டுக் கொள்ளாவிட்டால் கோவிட் சுனாமி ஏற்படும்
பூஸ்டர் டோஸை போட்டுக் கொள்ளாவிட்டால் கோவிட் சுனாமி ஏற்படும் என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
20 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் விடுமுறைக் காலத்தில் அனைவரும் பல்வேறு இடங்களுக்குச் செல்லக்கூடிய சாத்தியம் அதிகமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே முடிந்தளவு வேகமாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அருகாமையில் இருக்கும் தடுப்பூசி மத்திய நிலையத்திற்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் தற்பொழுது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri