சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டால் பணவீக்கம் உயரும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரசாங்க ஊழியர்கள் கோருவது போன்று சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டால் பாரியளவு பணவீக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரித்தால் அவ்வாறு வழங்கப்படும் தொகைக்காக பணத்தை அச்சிட நேரிடும் என தொழிற்சங்கங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்
பணம் அச்சிட்டால் மீண்டும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் எனவும்,இதனால் சம்பளங்களை அதிகரிப்பதில் எவ்வித பலனும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணத்தை அச்சிட்டு சம்பளங்களை அதிகரிக்க வேண்டுமாயின் அதனை தொழிற்சங்கங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan