ஜனாதிபதித் தேர்தலில் சஜித் போட்டியிட்டால் தோல்வி உறுதி :ஹரின் பெர்னாண்டோ
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் சஜித் பிரேமதாசவின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும். எனவே, பிரதமர் வேட்பாளர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படும் முடிவை அவர் தற்போது எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரான அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளர் பதவியை ஏற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுமாறு நான் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன்.
ஐந்து வருடங்கள்
ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அவர் ஐந்து வருடங்கள் கற்றுக்கொண்டால் நிச்சயம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியும். அவ்வாறு இல்லாமல் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முற்பட்டால் இறுதியில் தோல்வி ஏற்படும்.
இவ்வாறு இரு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் அத்துடன் அவரின் அரசியல் வாழ்வும் முடிந்துவிடும். எனவே, சஜித்துக்கு மூளை இருந்தால் அவர் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
