ரணில் தோல்வி கண்டால் முழு இலங்கைக்கும் ஏற்படப்போகும் பாதிப்பு!
ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்தால் முழு இலங்கையும் தோல்வியடையும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ.விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நம்பிக்கைகள் பலனளிக்காது ஏனென்றால் நம்பிக்கைகள் மனதின் கற்பனையே. இலக்குகளை அடைவதற்காக நாங்கள் பணியாற்றவேண்டும், பாடுபடவேண்டும்.
இதன் காரணமாக அமைப்பு முறையில் உண்மையான மாற்றத்திற்கான போராட்டங்கள், கிளர்ச்சிகள் தொடரவேண்டும். தங்கள் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறக்கூடியவர்களால் ஆளப்படும் ஊழல் அற்ற சமூகத்தையே இவர்கள் கோரிநிற்கின்றனர்.
இதனை நிர்வாக அமைப்பிற்கு வெளியே இருந்து நடைமுறைப்படுத்தவேண்டும். சட்டபூர்வமாக ஆணை வழங்கப்பட்ட ஆட்சி முறைமையுடன். மக்களிற்கு நன்மையளிக்ககூடிய அனைவரையும் உள்ளடக்கிய ஸ்தாபனங்களை உருவாக்கவேண்டும், மக்களின் செல்வத்தை கொள்ளைடியக்கும் நிறுவனங்களை நிறுவுவதற்கான சாத்தியத்தை நீக்கவேண்டும்,ஆட்சியாளர்களின் அதிகார துஸ்பிரயோகத்தை தடுப்பதற்கான உரிய ஏற்பாடுகளை முன்வைக்கவேண்டும்.
இது ரணில் விக்ரமசிங்கவின் இடைக்கால அரசாங்கத்திற்கான பணிகள். ரணில் தோல்வியடைந்தால் இலங்கையும் தோல்வியடையும். இந்த தோல்வி அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வியாகயிராது மாறாக ஒரு தேசமாக இலங்கையின் இருத்தலிற்கான தோல்வியாக இது காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
