கோட்டாவுக்கு மேலும் ஒரு எச்சரிக்கை! ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளையதினம், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச,கடந்த திங்கட்கிழமை பதவி விலகியமையை அடுத்து, நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம் நேற்றைய தினம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக பதவியை விட்டு விலகுமாறு சமரசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக நாட்டில் உள்ள பல அரசியல் இயக்கங்கள் தமது வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளன.
எனவே நாடு எவ்வாறான தீர்விற்கும் செல்ல வேண்டும். நாடு இனியும் வழிதவறிச் செல்லக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நாளை பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மாபெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி தனது பதவியை விட்டு விலகாதுபோனால், பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை பாரிய மக்கள் போராட்டமாக மாற்றவுள்ளதாகவும் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri