விடுதலைப் புலிகளின் தலைவர் இருந்திருந்தால் சிங்கள மக்களையும் காப்பாற்றியிருப்பார்! ஆவேசமாக பேசிய பெண் (Video)
நாங்கள் வரலாற்று பாடத்தில் படித்திருக்கின்றோம், இலங்கை கடலால் சூழப்பட்ட நாடு என்று. ஆனால் இன்று இலங்கை வறுமையாலும், பசியாலும், இருளாலும் சூழப்பட்டுள்ளது என்று போராட்டக் களத்தில் நின்று போராடும் ஒரு பெண் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் அலரி மாளிகைக்கு முன்னர் தற்போது பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சம்பவ இடத்தில் கடும் பதற்ற நிலை நிலவி வருவதுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் மிகவும் ஆவேசமாக தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இன்று மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். வெட்கமாக உள்ளது. கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த அனைவரும் இன்று துயரத்தில் உள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்தால் சிங்கள மக்களையும் காப்பாற்றியிருப்பார், எம்மையும் காப்பாற்றியிருப்பார்.
எங்கேயும் சென்று நாம் கைநீட்டி கடன் வாங்கத் தேவையில்லை. பிரபாகரன் உதவி செய்திருப்பார். இந்த நாட்டில் இருப்பதற்கு வெட்கமாக இருக்கின்றது. இதற்குமேலும் இங்கு இருக்க முடியாது.
எவ்வளவோ பேர் அகதிகளாக இந்தியா நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதைவிட ஒரு கேவலமான நிலை வேறு எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார்