எல் நினோவால் இலங்கைக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எல் நினோ மற்றும் வறண்ட வானிலை காரணமாக, 2027 ஆம் ஆண்டின் சிறுபோக பருவத்தில் நெல் அறுவடை சுமார் ஆயிரம் மெட்ரிக் டன்கள் குறைய கூடும் என விவசாயத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.
இந்த பாதிப்பை ஈடுசெய்யும் நோக்கில், இந்த ஆண்டில் சிறுபோக மற்றும் பெரும்போகம் ஆகிய இரு பருவங்களிலும் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறுகிய கால நெல் ரகங்களை பயிரிடுவது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
பயிர்களுக்கு முன்னுரிமை
இதேபோல், காய்கறி பயிர்ச்செய்கையின் போதும் குறுகிய காலத்தில் அறுவடை தரக்கூடிய பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.

மேலும், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமைச்சு தீர்மானித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உரங்களின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும். இதனால் இலங்கைக்குத் தேவையான உர இருப்புக்களை உடனடியாக விண்ணப்பம் செய்யுமாறு உலக உணவு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு பெரும் சிக்கல்கள்
தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் நிறைவு நிகழ்வில் உலக உணவு அமைப்பின் பிரதிநிதிகள் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த எல் நினோ காலநிலை மாற்றத்தால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் கடுமையான வறட்சி ஏற்படும்.
அந்த நாடுகளில் இருந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கைக்கு பெரும் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam