கோவிட் தொற்றாளர்களால் நிரம்பி வழியும் IDH வைத்தியசாலை
கோவிட் தொற்றாளர்களால் IDH வைத்தியசாலை நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கோவவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் மருத்துவர் ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றாளர்களுக்கு மேலதிகமாக 30 டெங்கு நோயாளர்களும் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் வேகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஒக்ஸிஜன் தேவைப்படும் பல நோயாளிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி! - வடமராட்சியில் பெரும் பதற்றம் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |