ஹிஸ்புல்லாவுக்கு IDFஇன் பலத்த அடி.. மூத்த அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல்
ஹிஸ்புல்லாவின் மூத்த அதிகாரி மீது பெய்ரூட்டில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தளங்கள் மீது ஐ.டி.எஃப் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் நாடாளுமன்றப் பிரிவின் தலைவர் முகமது ராத் கொல்லப்பட்டதாக சவுதி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
பல முக்கிய அதிகாரிகளுக்கு இலக்கு
ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேலை நோக்கி இரவு முழுவதும் பல ஏவுகணைகளை ஏவியதற்கு பதிலடியாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த தாக்குதல்களில் பெய்ரூட்டில் பல மூத்த ஹிஸ்புல்லா அதிகாரிகளையும் தெற்கு லெபனானில் ஒரு மத்திய ஹிஸ்புல்லா அதிகாரியையும் இலக்கு வைத்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இருப்பினும், தாக்குதலில் பலியான அல்லது பாதிக்கப்பட்ட எந்தவொரு ஹிஸ்புல்லாவின் மூத்த அதிகாரியின் பெயரையும் இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தவில்லை.
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு