தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு
நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான விசேட சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்த போர் பதற்றம் மற்றும் விமான இரத்துச் சம்பவங்கள் காரணமாக டுபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளை அரசே ஏற்கும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
இதன்படி, பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் ஏற்கனவே தங்கியுள்ள ஹோட்டல்களில் தங்குமிட காலத்தை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக நீட்டித்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக அரசுக்கு விருந்தினர்களின் பாதுகாப்பே முக்கியம் என இந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமையான நிலைப்பாடு

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகள் ஈரானுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
அதன்படி ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் அதிரடி எச்சரிக்கை: லெபனானிலிருந்து அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள் - ஆரம்பித்துள்ள தாக்குதல்