இஸ்ரேலின் அதிரடி எச்சரிக்கை: லெபனானிலிருந்து அவசரமாக வெளியேற்றப்படும் மக்கள் - ஆரம்பித்துள்ள தாக்குதல்
லெபனான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல் மற்றும் கமேனியின் மறைவைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் நிலைமை தீவிர போக்கை காட்டி வருகிறது.
இவ்வாறான சூழலில் லெபனானின் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
லெபனானின் தென்பகுதி மற்றும் பெய்ரூட் புறநகர் பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்படவுள்ள இலக்குகளில் இருந்து குறைந்தது 1000 மீற்றர் தொலைவிற்கு அப்பால் செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தாக்குதல்
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் கமேனியின் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தது.

இதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பெய்ரூட்டின் தெற்குப் புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் தற்போது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேல் பாதுகாப்புத் தரப்பின் அறிவிப்பில், தமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு எதிரியும் அதற்கான விலையைத் தீர்மானமாகச் செலுத்தவேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri