இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் சேவை
கிழக்கு மாகாணத்தில் இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரை அடையாள அட்டை கிடைக்கப் பெறாத மாணவர்கள், அத்துடன் அடையாள அட்டை கிடைக்கப்பெற்ற அடையாள அட்டைகளில் ஏதும் திருத்தங்கள் காணப்படின் உடனடியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தினை தொடர்பு கொள்ளுமாறு மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஜி.அருணன் தெரிவித்துள்ளார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் 4 மணிவரை இச் சேவை இடம் பெறும்.
இது தொடர்பில் 065-2229449, 0719592224 தொலைபேசி இலக்கங்களுடன் அல்லது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்களத்தினை தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட வங்கிகள்: முழுமையாக நிறுத்தப்பட்ட அரச ஊழியர் ஆட்சேர்ப்பு..! ஜனாதிபதியின் தகவல்
பல்வேறு உடல்நலப் பாதிப்புக்களால் அவதியுறும் ஷிரந்தி! நாட்டுக்கு சேவை செய்தவர்களின் இன்றைய கதி - புலம்பும் தயாசிறி