அச்சுறுத்தலாக மாறியுள்ள டெல்டா வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம்
டெல்டா என அழைக்கப்படும் தீவிர பரவல் தன்மையைக்கொண்ட இந்திய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கோவிட் நோயாளி வெல்லம்பிட்டியவின் கிட்டம்பஹுவ என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
38 வயதான இவர் பொரல்லயில் உள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிகிறார் என்று பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தாம், தற்போது பாதிக்கப்பட்டவரின் தொடர்புகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே அவர் தொற்றாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அந்த பகுதியில் இருந்து வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
இலங்கையில் முதலில் டெல்டா மாறுபாடு, கொழும்பு தெமட்டகொட பகுதியில் கண்டறியப்பட்டது, மற்றொரு நோயாளி இதேபோன்ற தொற்றுநோயுடன் கஹதுடுவயில் கண்டறியப்பட்டார்.
அத்துடன் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கோவிட் நோயாளி, மாதிவல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
